For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா கைதி எண் 9934, இளவரசி கைதி எண் 9935.. பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒதுக்கப்பட்டது!

சிறையில் கைதிகளுக்கு வரிசை எண் வழங்கப்படுவது வழக்கம். சசிகலாவுக்கு 9934 என்ற எண்ணும், இளவரசிக்கு, 10712 என்ற எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு பெங்களூர் சிறையில் கைதி எண் 9934 ஒதுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவரும், அவரின் அண்ணன் மனைவியும் சக குற்றவாளியுமான இளவரசியும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Sasikala has allotted the prisoner number 10711, Ilavarasi- 10712

சிறையில் கைதிகளுக்கு வரிசை எண் வழங்கப்படுவது வழக்கம். சசிகலாவுக்கு 9934 என்ற எண்ணும், இளவரசிக்கு, 9935 என்ற எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுதாகரனுக்கு 9936 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் இதே வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து இதே பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டனர்.

அப்போது ஜெயலலிதாவின் கைதி எண் 7402 ஆகும். சசிகலாவுக்கு 7403 என்ற கைதி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அதே ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நான்கு பேரும், கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மற்றும் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததால், அக்டோபர் 17ஆம் தேதி 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 21 நாள்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் ஜாமீனில் விடுதலையாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Convicted Sasikala has allotted the prisoner number 9934, Ilavarasi- 9935 in Parappana Agrahara Jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X