சிறையிலிருந்து விவேக், தினகரனுக்கு "ஆன்ஸர் ஷீட்" அனுப்பிய சசிகலா!
பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, தனது வழக்கறிஞர் மூலமாக தினகரன் மற்றும் விவேக் ஜெயராமனுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா ஐடி ரெய்டு குறித்து தமது வழக்கறிஞர்கள் மூலம் விவேகிற்கும், தினகரனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த வியாழக்கிழமை 187 இடங்களில் சோதனையை நடத்தினர். 5 நாள்களுக்கு பின்னர் கடந்த திங்கள்கிழமை சோதனைகள் நிறைவு பெற்றன.
சுமார் 5 நாள்கள் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் தங்க, வைர நகைகள், ரொக்க பணம் என பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவலை சிறையில் உள்ள சசிகலா அறிந்து கொண்டு மிகவும் மனம் வருந்தினார்.

பத்திரிகைகள் வாசித்த சசி
இந்த ரெய்டால் மிகுந்த மனஉளைச்சல் அடைந்த சசிகலா கடந்த 5 நாள்களாக சிறிதும் கண்கொட்டாமல் தமிழ் டிவி சேனல்களை பார்த்துள்ளார். பிறகு விடிந்தும் விடியாததுமாக நூலகத்துக்கு சென்று தமிழ் நாளேடுகளை வரி விடாமல் படித்துள்ளார்.

அண்ணியிடம் புலம்பல்
ரெய்டால் வெலவெலத்துக போன சசிகலா தூக்கத்தை இழந்து அண்ணி இளவரசியிடம் புலம்பியுள்ளார். பின்னர் சிறைத் துறை மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வழக்கறிஞர் அசோகனை வரவழைத்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். சட்ட ரீதியிலான ஆலோசனைகளை சசிகலா பெற்றதாக கூறப்படுகிறது.

வழக்கறிஞர் மூலம்...
இதையடுத்து தான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த கடிதங்களை வழக்கறிஞரிடம் சசிகலா அளித்துள்ளார். அவற்றை விவேக் ஜெயராமனிடமும், தனது அக்காள் மகன் தினகரனிடமும் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

கடிதத்தில் சசிகலா கூறியது என்ன?
அந்த இருவேறு கடிதங்களில் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் எந்த மாதிரியான ஆவணங்கள், கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும், எந்த கேள்விக்கு எந்த மாதிரியான பதில்களை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்களை சசிகலா தெரிவித்துள்ளார். இதன் மூலம் யாருக்கும் சிக்கல் ஏற்படாதவண்ணம் சசிகலா காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications