சிறைக்குள் மவுன விரதம் இருக்கிறாராம் சசிகலா.. தினகரன் சொல்லும் காரணம் தெரியுமா?
ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சசிகலா பெங்களூரு சிறையில் மவுன விரதம் இருந்து வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சசிகலா பெங்களூரு சிறையில் மவுன விரதம் இருந்து வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் சசிகலாவை சந்திப்பார் என கூறப்பட்டது.
ஆனால் உடனடியாக சிறைக்கு வரவேண்டாம் என சசிகலா கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று நேரில் சந்தித்தார்.

சசியிடம் ஆசி பெற்ற தினகரன்
இதைத்தொடர்ந்து சிறைக்கு வெளியே டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்கே நகரில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆசி பெற்றதாக அவர் கூறினார்.

சசிகலா சிறையில் மவுனவிரதம்
மேலும் சிறையில் உள்ள சசிகலா ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து மவுன விரதம் இருந்து வருவதாக அவர் கூறினார். சசிகலா மவுன விரதம் இருப்பதால் தான் பேசியதை மட்டும் அவர் கேட்டுக்கொண்டார் என்றும் தினகரன் தெரிவித்தார்.

ஜனவரி இறுதிவரை நீடிக்கும்
சசிகலா எதுவும் பேசவில்லை என்றும் தினகரன் கூறினார். மேலும் சசிகலாவின் மவுன விரதம் ஜனவரி மாதம் இறுதி வரை நீடிக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அவர்களுக்கு அதிகாரம் இல்லை
ஐடி ரெய்டு மீண்டும் நடக்கிறதா என்று தெரியவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். யாரையும் நீக்க ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே தீர்மானித்திருந்தேன்..
குக்கர் சின்னம் இறைவன் அருளினால் கிடைத்தது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். ஏற்கனவே குக்கர் சின்னத்தை தீர்மானித்து வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

ஜெ.க்கு வாரிசுகள் இல்லை
மக்கள், தொண்டர்களினால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ்தான் என்றும் தினகரன் சாடினார். ஜெயலலிதாவுகுகு வாரிசுகள் என்று யாரும் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications