பரோல் கேட்டு விண்ணப்பிக்க சசிகலாவுக்கு தகுதியே இல்லை? பரபர தகவல்கள்
வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருப்பதால் சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்கவே தகுதி இல்லை என்கின்றனர் பெங்களூரு சிறை அதிகாரிகள்.
Recommended Video

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியான சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்க தகுதியற்றவர் என பெங்களூரு சிறை அதிகாரிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா சிறைக்கு போன பின்னர் அவரது உறவினர்கள் மகாதேவன், சந்தானலட்சுமி ஆகியோர் காலமாகினர். இந்த இருவருமே சசிகலாவால் மிகவும் நேசிக்கப்பட்டவர்கள்.

பரோல் கேட்காத சசிகலா
ஆனால் இருவரது மறைவின் போதும் சசிகலா பரோலில் வெளிவருவார் என கூறப்பட்டது. சசிகலாவோ பரோலில் வரவில்லை.

தினகரன் வெளியிட்ட தகவல்
தற்போது சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. இந்நிலையில் சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்; இன்று பரோல் கிடைத்துவிடும் என தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

சசிகலா பரோல் கேட்கவில்லை
இதற்கு முன்னர் சசிகலா பரோல் கேட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அப்படி பரோல் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை என தினகரன் ஆதரவாளர்கள் பெங்களூரு புகழேந்தி கூறியிருந்தார்.

சசி பரோல் கேட்கவே முடியாது
இந்நிலையில் தினகரன் மீண்டும் சசிகலா பரோல் கேட்டிருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் பெங்களூரு சிறை அதிகாரிகளோ, சசிகலா மீதான வழக்குகள் முழுமையாக முடியடையவில்லை. நிலுவையில் உள்ளன. ஆகையால் அவர் பரோல் கேட்டு விண்ணப்பிக்கவே தகுதி இல்லாதவர். அவர் பரோல் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை என்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications