ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடக் கூடாது- தினகரனுடன் பெங்களூரு சிறையில் சசிகலா கடும் வாக்குவாதம்!
ஆர்.கே.நகரில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என சசிகலா கூறியதை தினகரன் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

பெங்களூரு: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிடக் கூடாது என பெங்களூரு சிறையில் சசிகலா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் சசிகலாவை மீறி தேர்தலில் போட்டியிட்டே தீருவேன் என சபதம் போட்டுவிட்டு திரும்பியிருக்கிறாராம் தினகரன்.
சசிகலா சிறைக்குப் போன பின்னர் அவரது சொந்தங்கள் அரசியலில் தலையெடுக்க மாட்டார்கள் என டெல்லி நினைத்தது. ஆனால் தினகரன் தடாலடி காட்டினார்.
இதனால் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரன் சிறைக்குப் போக நேரிட்டது. சிறையில் இருந்து தினகரன் வந்த போது அதிமுக எடப்பாடியார் வசம் போனது.

டெல்லி கோபம்
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஆனாலும் தினகரன் சவுண்டு கொடுத்து வந்தது டெல்லியை கடுப்பேற்றியது. இதன்பின்னர் ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பமே வருமான வரித்துறையில் சிக்கியது.

ஆர்கே நகர் தேர்தல்
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு என அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிடுவேன் என தினகரன் அடம்பிடிக்கிறார்.

சசிகலாவுடன் ஆலோசனை
ஆனால் நடராஜன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் தினகரன் போட்டியிடுவதை விரும்பவில்லை. இதனால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்தார். அந்த சந்திப்பின் போதும் தினகரனை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றே சசிகலா சொல்லியிருக்கிறார்.

சசியை மீறி போட்டி
இதை ஏற்க மறுத்த தினகரன், சசிகலாவுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். தமக்கு செல்வாக்கு இருக்கிறது; அதை தேர்தலில் நிரூபிப்பேன்; இப்போது போட்டியிடாவிட்டால் தொண்டர்கள் ஓடிவிடுவார்கள் என உரத்த குரலில் வாதிட்டிருக்கிறார். ஆனாலும் சசிகலா ஏற்கவில்லையாம். சசிகலா விரும்பாத நிலையிலும் தினகரன் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார். இது அவரது ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications