For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறையில் சசிகலாவுக்கு மெழுகுவர்த்தி செய்யும் வேலை.. ஒருநாள் சம்பளம் ரூ.50

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு தினமும் ரூ.50 சம்பளத்தில் மெழுகுவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய கால அவகாசம் கேட்ட சசிகலாவின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Sasikala to prepare candle at jail

இதையடுத்து சசிகலா இன்று மாலை 5.15 மணிக்கு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் இளவரசியுடன் சரண் அடைந்தார்.

சசிகலாவுக்கு விஐபி அறை அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும் தன்னையும், இளவரசியையும் ஒரே அறையில் அடைக்க வேண்டும் என்ற சசியின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

சிறையில் மெழுகுவர்த்தி செய்யும் பணி சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 சம்பளம் வழங்கப்படும்.

English summary
Sasikala is set to prepare candles at Parapana Agrahara prison in Bengaluru. She will be given Rs. 50 per day for making candles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X