For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸில் ஐக்கியமாவாரா 'தில்' சசிகலா புஷ்பா? இப்போதே செம கடுப்பில் விஜயதாரணி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

முதல்வர் ஜெயலலிதா தம்மை அறைந்ததாக கூறி ராஜ்யசபாவில் பிரளயத்தைக் கிளப்பினார் சசிகலா புஷ்பா. இதனால் அவர் அதிமுகவில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இருப்பினும் தாம் ஒருபோதும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்; 2020 வரையில் ராஜ்யசபா எம்.பியாகவே நீடிப்பேன் என கூறி வருகிறார் சசிகலா புஷ்பா. இந்த நிலையில் அவர் சோனியா, ராகுலை சந்திக்க நேரமும் கேட்டிருக்கிறார்.

சோனியா, ராகுலை சந்திக்கிறார்...

சோனியா, ராகுலை சந்திக்கிறார்...

சோனியா, ராகுலை சந்தித்து ராஜ்யசபாவில் தமக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவிக்க இருக்கிறார் சசிகலா புஷ்பா என கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து தனி நபராக போராடுவதை விட, கட்சிகளின் ஆதரவு தமக்கு தேவை என்பதையும் அவர் உணர்ந்தவராக இருக்கிறார்.

காங். கருணை

காங். கருணை

இதனால்தான் "மேடம்" கனிமொழி என அழைத்து திமுகவின் ஆதரவைப் பெற்றிருக்கிறார். சோனியாஜி, ராகுல்ஜிக்கு நன்றி என சொல்லி காங்கிரஸின் கருணையையும் பெற்றிருக்கிறார் சசிகலா.

காங்கிரஸில் சேருகிறார்?

காங்கிரஸில் சேருகிறார்?

இந்த நிலையில் ஜெயலலிதாவுடன் மோதுகிற 'தில்' சசிகலா புஷ்பாவை காங்கிரஸில் சேர்த்துக் கொள்ளலாம் என்கிற கருத்தும் அக்கட்சியில் எழுந்துள்ளது. அதிமுகவின் மகளிர் அணி செயலராக இருந்தவர் சசிகலா. ஆகையால் தமிழக காங்கிரஸ் கமிட்டியிலோ அல்லது அகில இந்திய அளவிலோ மகளிர் அணி பொறுப்பை கொடுத்து அவரை தக்க வைக்கலாம் என்பது காங்கிரஸில் ஒரு தரப்பினரின் கருத்து.

விஜயதாரணி விரக்தி

விஜயதாரணி விரக்தி

அதே நேரத்தில் ஏற்கனவே காங்கிரஸில் நடிகைகள் குஷ்பு, நக்மாவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் விஜயதாரணியோ, சசிகலா புஷ்பாவை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியதை வரவேற்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். எங்கே சசிகலா புஷ்பா, காங்கிரஸுக்கு வந்து தமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்சம் இடத்தையும் தட்டிப்பறித்துவிடுவாரோ என்ற அச்சத்தின் வெளிப்பாடாகவே இது தெரிகிறது. மேலும் காங்கிரஸில் தம்முடைய கட்சி பதவி பறிக்கப்பட்டபோது ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவுக்கு தாவும் நிலையில் இருந்தவர் விஜயதாரணி என்பதும் நினைவிருக்கலாம்.

விரைவில் ஜோதியில் ஐக்கியம்?

விரைவில் ஜோதியில் ஐக்கியம்?

ராகுல் காந்தியைப் பொறுத்தவரையில் திரைநட்சத்திரங்கள், சர்ச்சைக்குரிய பிரபலங்களை கட்சிக்குள் வளைத்துப் போடுவதன் மூலம் ஊடக வெளிச்சம் எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கும் என்பது நீண்டகாலமாக பின்பற்றி வரும் வியூகம். இந்த பாணியில் சசிகலா புஷ்பாவையும் காங்கிரஸ் ஜோதியில் கலக்க வைத்துவிடலாம் என ராகுல் திட்டமிடலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.

நடக்கட்டும் நடக்கட்டும்!

English summary
Sources said that Expelled AIADMK MP Sasikala Pushpa may join Congress Party very soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X