இந்தப் பக்கமே வரக் கூடாது.. திரும்பிப் போயிரு.. சசி விட்ட டோஸில் ஹோட்டலில் முடங்கிய தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தம்மை முழுமையாக ஓரம்கட்டி ஆட்டம் போட்ட தினகரனை பெங்களூரு சிறையில் சந்திக்க சசிகலா மறுத்துவிட்டார். இதனால் அதிர்ந்து போய் பெங்களூரு ஹோட்டலிலேயே தினகரன் முடங்கிவிட்டார்.

சசிகலா சிறைக்குப் போன உடனேயே அதிமுகவை தன் வசமாக்கிக் கொண்டார் தினகரன். ஆர்கே நகர் தொகுதியில் சசிகலா தேர்வு செய்திருந்த சுதா விஜயகுமாருக்கு பதில் தம்மையே வேட்பாளராக அறிவித்துக் கொண்டார் தினகரன்.

Sasikala refuses to meet Dinakaran

ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் சசிகலா படத்தையே போடாமல் பிரசாரம் செய்தார் தினகரன். அத்தொகுதி பிரசாரத்தில் கட்சி பொதுச்செயலர் சசிகலா பெயரை உச்சரிக்கவும் கட்சியினருக்கு தடை விதித்தார் தினகரன்.

இதனால் தினகரன் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார் சசிகலா. இந்த நிலையில் தமக்கு கட்சியில் நெருக்கடி அதிகரித்துவிட்டதால் சசிகலாவை சந்திக்க பெங்களூருக்கு ஓடினார் தினகரன்.

ஆனால் சசிகலாவோ, தினகரனை சந்திக்க விரும்பவில்லை.. இந்த பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது என உத்தரவிட்டாராம். இதனால் ஹோட்டல் அறையிலேயே தினகரன் அதிர்ந்து போய் முடங்கிக் கிடக்கிறார் என்கின்றன பெங்களூரு செய்திகள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala refused to meet TTV Dinakaran in Bengaluru prison Today.
Please Wait while comments are loading...