நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்.. 10 நாட்கள் பரோலில் வருகிறார் சசிகலா
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் அவரை காண 10 நாள்கள் பரோல் கேட்க சசிகலா முடிவு செய்துள்ளதாக கருத்துகள் நிலவுகின்றன.
பெங்களூர்: பல்லுறுப்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனை சந்திக்க 10 நாள்கள் பரோல் கேட்டு சசிகலா விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்ததை அடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்துவிட்டது. உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். உறுப்பு தான மையத்தில் கல்லீரலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டயாலிசிஸ் சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.
அவரை சந்திக்க சசிகலா பரோல் கேட்கக் கூடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் நடராஜனின் நிலை மோசமாக உள்ளது. கவலைக்கிடமாக இருக்கும் கணவர் நடராஜனை பார்க்க சசிகலா பரோல் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விடுமுறை காலம் என்பதால் விடுமுறை முடிந்து வரும் 5- ம் தேதியில் இருந்து 10 நாட்கள் பரோலில் விடுவிக்குமாறு கோரிக்கை மனுவை அவர் அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இத்தகவலை உறுதி செய்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications