For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் ஜெயில் அப்டேட்.. சசிகலாவுக்கு வாரத்தில் ஒருநாள் போன்லெஸ் மட்டன், முட்டை

சசிகலாவுக்கும் வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மட்டன் உள்ளிட்ட அசைவ சாப்பாடு கிடைக்கும் என்று சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில், வாரத்திற்கு ஒருமுறை சசிகலா மற்றும் இளவரசிக்கு மட்டன் வழங்கப்படும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வாரத்தில் இரு நாட்கள் தங்களுக்கு அசைவ சாப்பாடு வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். இக்கோரிக்கையை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Sasikala will get boneless mutton once a week

இந்நிலையில், இக்கோரிக்கையை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சிறை விதிமுறைப்படி நாள் ஒன்றுக்கு, ஒரு கைதிக்கான சராசரி சாப்பாட்டு செலவு ரூ.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 வருடங்களாக, ரூ.48 ரூபாய் என்ற அளவில்தான் இருந்த இந்த செலவீனம், 3 வருடங்கள் முன்புதான் உயர்த்தப்பட்டது.

இதன் மூலம் வாரத்தில் ஒருநாள் எலும்பில்லாத மட்டன் கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் அளவு 115 கிராம். கூடுதலாக கொஞ்சம் சிக்கனும், முட்டையும் கொடுக்கப்படும். கடலோர பகுதிகளிலுள்ள சிறைகளிலுள்ள கைதிகளுக்கு சிக்கனுக்கு பதிலாக மீன் கொடுக்கப்படும்.

எனவே சசிகலாவுக்கும் வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மட்டன் உள்ளிட்ட அசைவ சாப்பாடு கிடைக்கும் என்று சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

English summary
While prisoners in Parappana Agrahara prison are currently being served boneless mutton once a week, the new additions include one portion of chicken (fish in jails on the coastal belt) and an egg. .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X