கேரளா ஆளுநர் சதாசிவம் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராகிறார்?
டெல்லி: கேரளா ஆளுநரும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தற்போது கே.ஜி.பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக யாரை நியமனம் செய்யலாம் என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் கேரளா ஆளுநருமான சதாசிவம், மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் அவர் டெல்லியில் தொடர்ந்து சட்டம் தொடர்பான உயர் பதவியில் பணியாற்ற விரும்பினார்.
ஆனால் அந்த சமயத்தில் டெல்லியில் அவரது சிறப்புக்குரிய உயர் பதவி எதுவும் காலியாக இல்லாமல் இருந்தது. இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சதாசிவம் கேரள மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவி காலியாவதால், அந்த இடத்தில் சதாசிவத்தை நியமனம் செய்ய மத்திய அரசு முன் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக சதாசிவம் நியமிக்கப்பட்டால் 2020-ம் ஆண்டு வரை 5 ஆண்டுக்கு பதவியில் இருப்பார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications