இந்திய மாணவர்கள் திறமையானவர்கள், உதாரணம் ‘சத்யா நாதெல்லா’...: ப.சிதம்பரம் புகழாரம்
டெல்லி: மற்ற நாட்டு மாணவர்களை விட இந்திய மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். இதற்கு உதாரணமாக இந்தியரான சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதைக் கூறலாம் எனத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக புதிதாக நியமிக்கப் பட்டுள்ள 46 வயது சத்யா நாதெல்லா இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் ரெட்மாண்டில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 3-வது தலைமை செயல் அதிகாரியாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாப்டின் 38 ஆண்டு கால வரலாற்றில், தலைமை பொறுப்பில் ஏற்றிருக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை சத்யா நாதெல்லா பெற்றிருக்கிறார்.
இந்நிலையில்,கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சத்யா நாதெல்லாவைப் பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது, ‘சில இந்திய மாணவர்கள் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாட்டு மாணவர்களை விட திறமையுள்ளவர்களாக உள்ளனர். இல்லாவிடில் 46 வயதான இந்தியர்0 மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்திருக்க மாட்டார்கள்' எனத் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications