சொத்து குவிப்பு வழக்கு: ஆஜராவதில் இருந்து ஜெ.வுக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட் விலக்கு

1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கு பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.
அண்மையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் புதிய நீதிபதியாக முடி கவுடர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நாளை (30-ந் தேதி) நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால் தமிழக சட்டசபை நடந்து வருவதால் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார். அத்ததுடன் புதிய நீதிபதி முடி கவுடர் நியமனத்துக்கு எதிராகவும் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை முடியும் வரை பெங்களூர் நீதிமன்ற விசாரணைக்கு தடையும் நான்கு பேர் சார்பில் கோரப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பி,எஸ்,சவுகான், எஸ்,ஏ,பாப்டே ஆகியோர், பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர். ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications