லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த பிசிசிஐக்கு சுப்ரீம்கோர்ட் "எச்சரிக்கை" உத்தரவு
டெல்லி: லோதா குழுவின் பரிந்துரைகளை முழுமையாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பிக்ஸிங் புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.

சிஎஸ்கேவுக்கு தடை
அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. பிசிசிஐ அமைப்பிலும், அதன் செயல்பாட்டிலும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரைக்கும்படி லோதா குழுவுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

லோதா கமிட்டி
இதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, அசோக் பான், ரவீந்திரன் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. லோதா தலைமையிலான குழு, பிசிசிஐயின் விதிகளை ஆராய்ந்து கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் 159 பக்க பரிந்துரையை அளித்தது.

பரிந்துரைகள்
அதில், பிசிசிஐ நிர்வாகிகளுக்கு 3 ஆண்டுகால பதவி மட்டுமே வழங்கப்பட வேண்டும். பிசிசிஐ தலைவர் பதவி வகிப்பவர்கள் 3 ஆண்டுகள் கொண்ட பதவிக்காலத்தில் 2 முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற நிர்வாகிகள் 3 ஆண்டுகால பதவியை 3 முறைக்கு மேல் வகிக்கக் கூடாது. பிசிசிஐக்கு ஒரு தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். அவர் பிசிசிஐயின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கவேண்டும். பிசிசிஐயின் தேர்தல்களுக்கு தேர்தல் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது.

எச்சரிக்கை உத்தரவு
இதனை முழுமையாக செயல்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்து உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பீகார் கிரிக்கெட் வாரியம் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், லோதா குழுவின் பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முழுமையாக செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக 4 வாரத்துக்குள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க வேண்டும். லோதா குழுவின் பரிந்துரைகளை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முழுமையாக செயல்படுத்தவில்லை எனில் நீதிபதிகள் குழுவை உச்சநீதிமன்றமே நியமித்து செயல்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications