காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி... இனியாவது மவுனம் கலைக்குமா மோடி அரசு?
சென்னை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து இன்று உச்சநீதிமன்றமே மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து கள்ள மவுனம் சாதித்து வரும் மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழகத்தின் எதிர்பார்ப்பு.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மத்திய அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வந்தது.

இதற்கு சப்பை கட்டும் பாஜக தலைவர்களோ, காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது... ஆகையால்தான் தாமதம் என்றெல்லாம் கூறி வந்தார்கள்... குறிப்பாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதையே கிளிப்பிள்ளை போல சொல்லி வந்தார்கள்.
அதேபோல் காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு எந்த ஒரு அதிகாரமுமே இல்லை; அதையெல்லாம் ஏற்க முடியாது என்பதும் தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைப்பதுதான் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
அத்துடன் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வளவு விரைவாக அமைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுநாள் வரை உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி போக்கு காட்டி வந்தது மோடி அரசு.
இதோ இப்போது உச்சநீதிமன்றமே தலையில் குட்டி போய் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வேலையை பாருங்கள் என சொல்லியிருக்கிறது.. இப்போதாவது தமிழக பாஜகவினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒற்றைத் தீர்வான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க குரல் கொடுப்பார்களா? அல்லது கர்நாடகாவில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்ற இலவு காத்த கிளியாக தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மத்திய பாஜக அரசு காவு கொடுக்க உடந்தையாக இருக்கப் போகிறார்களா?
தமிழக மக்கள் 'ஆவலோடு' எதிர்பார்க்கிறார்கள்!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications