ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் அரசியல்வாதிகள் தலையிடுவதா?: உச்சநீதிமன்றம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

SC to bureaucrats: Don't take oral instructions from netas
டெல்லி: ஐஏஎஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதால் நிர்வாக சீர்கேடு ஏற்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒரு பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர் மற்றும் 82 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் இருந்து மாற்றம் செய்வதற்கு குறைந்தபட்ச கால வரையறையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அரசியல் தலையீட்டால் அதிகாரிகள் அடிக்கடி பணி மாறுதல் செய்யப்படுவது மக்கள் நலத்திட்டங்களை பாதிக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணிநியமனம், பணிமாறுதல் உள்ளிட்டவற்றை நெறிமுறைப்படுத்த புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மூன்று மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+