அமைச்சர் ஒன்றும் சட்டத்துக்கும் மேலானவர் அல்ல- காமராஜ் வழக்கில் சுப்ரீம்கோர்ட் 'சுளீர்'

தமிழக அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்யாதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மன்னார்குடி எஸ்பி விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோசடி வழக்கில் அமைச்சர் காமராஜ் மீது ஏன் வழக்குப் போடவில்லை என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்விஎஸ் குமார். ஒப்பந்ததாரரான குமாருக்கு சொந்தமான வீடு விவகாரத்தில் அமைச்சர் காமராஜ் ரூ30 லட்சம் வாங்கியுள்ளார்.

திருப்பிக் கேட்ட குமார்

திருப்பிக் கேட்ட குமார்

ஆனால் அமைச்சர் காமராஜ் உறுதியளித்தபடி அந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை ஒப்பந்ததாரரான குமார் திருப்பிக் கேட்டிருக்கிறார்.

மிரட்டல் விடுத்த காமராஜ்

மிரட்டல் விடுத்த காமராஜ்

இருப்பினும் அமைச்சர் காமராஜ் பணத்தை தர முடியாது என குமாருக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் குமார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசுக்கு கடும் கண்டனம்

தமிழக அரசுக்கு கடும் கண்டனம்

அப்போது, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யாததற்கு தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமைச்சர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல; நீதிமன்றத்தை தமிழக அரசு தவறாக வழிநடத்துகிறது. மன்னார்குடி எஸ்,பி. உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+