ஜெ. விடுதலையை எதிர்க்கும் அப்பீல் மனுவை விசாரிக்கும் இரு நீதிபதிகள் பெஞ்ச் அறிவிப்பு!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை இரு நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கடந்த மே 11-ம் தேதி நால்வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் சிறப்பு மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் விடுதலையை ரத்து செய்யக் கோரியும், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து 6 தனியார் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களில் உள்ள குறைகள் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு, இரு தரப்பும் திருத்தப்பட்ட மனுக்களை தாக்கல் செய்தன. இம்மனுக்களுக்கு குற்றவியல் வழக்கு எண்கள் ஒதுக்கப்பட்டன.
ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மனுவின் விசாரணை விவரங்கள் குறித்த பட்டியல் வரும் 27-ந் தேதி வெளியிடப்படும் என பதிவாளர் அலுவலகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இருநீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே. அகர்வால் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் என தெரிவித்துள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications