ஏர்செல் மேக்சிஸ் வழக்கை டெல்லி சிபிஐ கோர்ட் விசாரிக்கும்- கலாநிதி, தயாநிதி அப்பீல் டிஸ்மிஸ்!!
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை மட்டும்தான் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்; ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மாறன் சகோதரர்கள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதி ஓபி ஷைனி தள்ளுபடி செய்தார்.
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இன்றைய விசாரணையின் முடிவில் மாறன் சகோதரர்களின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஸ்பெக்டரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றமே ஏர்செல்-மேக்சிஸ் வழக்கையும் விசாரிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications