ஆன்மீகப்படி ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்தனுமா?- ஐயப்பன் கோவில் வழக்கில் சுப்ரீம்கோர்ட் கேள்வி
டெல்லி: ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என ஆன்மீகம் சொல்லுகிறதா? என்று ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கில் கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பும் 5 பெண் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

வழக்கின் விசாரணையின் தொடக்கத்தில் இருந்தே ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது? என்பதே நீதிபதிகளின் கேள்வியாக இருந்து வருகிறது.
இன்றைய விசாரணையின் போதும், சனாதான தர்மப்படி ஆண், பெண் அனைவரும் சமம். வேதங்களும் சாத்திரங்களும் பெண்களை ஒதுக்கி வைக்கலையே.. பிறகெப்படி சபரிமலையில் மட்டும் அனுமதிக்காம இருக்க முடியும்?
ஆண்களைத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று ஆன்மீகம் சொல்லுகிறதா?
பெண்களுக்கான உரிமையை அரசியல் சட்டத்துக்குட்பட்டு ஆய்வு செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரனை ஆலோசகராகவும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. அதேபோல் சபரிமலையில் பெண்கள் எப்போது முதல் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கான விளக்க ஆதாரங்களை 6 வார காலத்துக்குள் தாக்கல் செய்யவும் கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications