கோவை சிறுமி பலாத்கார கொலை- குற்றவாளியின் தூக்குத் தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி: கோவையில் சிறுமி முஸ்கான் மற்றும் அவளது தம்பி ரித்திக் ஆகியோரை கடந்த 2010ம் ஆண்டு கடத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கால்வாயில் தள்ளி கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மனோகரனின் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் முஸ்கான், ரித்திக். சிறார்களான இருவரையும் டாக்சி டிரைவர் மோகன்ராஜ் மற்றும் மனோகரன் ஆகியோர் கடந்த 2010ம் ஆண்டு கடத்திச் சென்றனர். பின்னர் சிறுமியை கொடூரமாக இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பின்னர் இருவரையும் கால்வாயில் தள்ளிக் கொலை செய்து விட்டனர்.
இந்த வழக்கில் மோகன்ராஜ், மனோகரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றதாக மோகன்ராஜை போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர். மனோகரன் மீது மட்டும் வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கில் மனோகரனுக்கு கோவை கோர்ட் தூக்குத் தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து மனோகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தண்டனை விதித்துள்ளது. மேலும் தமிழக போலீஸார் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications