ஜல்லிக்கட்டு: ரித்தீஷ் உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனு மீது 21ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 21ம் தேதி நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா ஆகியவை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மே 7ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2015ம் ஆண்டு பொங்கல் திருநாளின்போது ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி முப்பிலிசாமி கோவில் சார்பில் அறங்காவலர் பி.ராஜசேகரன், தமிழ்நாடு பாரம்பரிய வீர விளையாட்டு மாட்டு வண்டி காளைகள் மாநில நலச்சங்கம் மற்றும் தமிழர் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் ஜே.கே.ரித்திஷ் குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மறு ஆய்வு மனுக்கள் நீதிபதிகள் வி.கோபால கெளடா மற்றும் பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வரும் 21ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை ஓபன் கோர்ட் எனப்படும் திறந்த நீதிமன்ற அமர்வில் நடைபெறாமல், நீதிபதியின் அறையில் நடைபெறும். இந்த விசாரணையின்போது வழக்கறிஞர்களோ அல்லது மனுதாரர்களோ யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விசாரணை முடிந்து அன்று மாலை அல்லது மறுநாள் நீதிமன்றப் பதிவாளர் நீதிபதிகளின் முடிவை வெளியிடுவார்.
பல மாதங்களாக கிடப்பில் கிடக்கும் தமிழக அரசின் மனு
இதேபோல ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசின் சார்பில் மறுஆய்வு மனு ஒன்று கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது இன்னும் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அது எப்போது விசாரணைக்கு வரும் என்றே தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications