காவிரியில் 3 நாட்களுக்கு 6,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு
டெல்லி: காவிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கான நீரை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 20-ந் தேதியன்று செப். 27-ந் தேதி வரை 6,000 கன அடிநீரை திறந்துவிட உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவை மதிக்கவில்லை.

கர்நாடகா சட்டசபையை கூட்டி காவிரி நீர் குடிநீருக்குத்தான் என தீர்மானம் போட்டது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் காவிரியில் தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது; டிசம்பரில் சேர்த்து தருகிறோம் என ஒரு மனுவை கர்நாடகா தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரிக்க கூடாது தமிழக அரசு தரப்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே இன்று காவிரி நீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடகா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் இருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று சாடினர் நீதிபதிகள்.
ஆகையால் நன்னடத்தையை வெளிப்படுத்தும் விதமாக இன்றும் நாளையும் காவிரியில் தமிழகத்துக்கு 6,000 கன அடிநீரை திறந்துவிட மீண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாரிமனிடம், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதித்து நடப்பது நல்லது என உங்கள் முதல்வரிடம் கூறுங்கள் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டு கூறினர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications