தமிழகத்துக்கு பேரிடி! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது- சுப்ரீம்கோர்ட்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழகத்துக்கு பேரிடியாகும்.
டெல்லி: விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. இம்மனுக்கள் மீது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையில் முதலில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அதேபோல் காவிரியில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வருகிறது.
இதனையும் ஏற்க கர்நாடகா மறுத்து வருகிறது. இம்மனுக்கள் மீதான இன்றைய விசாரணையின் போதும் இடைக்கால உத்தரவு வரும் தமிழகத்துக்கு காவிரியில் 2,000 கன அடிநீரை கர்நாடக அரசு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு கர்நாடகா அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனே உத்தரவிட முடியாது என கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். காவிரி நீரின்றி தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனே உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றமும் கைவிரித்திருப்பது தமிழகத்துக்கு பேரிடியாகும். உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications