வரிச் சலுகை..வோடபோன் நிறுவனத்துக்கு எதிரான பொது நல மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி: வோடபோன் நிறுவனத்துக்கு வருமான வரிச் சலுகை அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
பிரிட்டனின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் 2007-ம் ஆண்டு ஹட்சிசன் நிறுவனத்தை கையகப்படுத்தியது தொடர்பாக ரூ.7,990 கோடி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித் துறை நோட்டீஸ் அளித்தது. இந்த தொகையை வோடபோன் நிறுவனம் செலுத்த மறுத்ததால், வட்டியுடன் சேர்த்து பாக்கித் தொகை ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

இந்நிறுவனத்துக்கு சிறப்புச்சலுகை அளித்து, சமரசத்தில் ஈடுபட கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்பேரில், சமரசத்தில் ஈடுபட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிஸ்வாஜித் பட்டாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, வோடபோன் நிறுவனத்துக்கு எதிரான பொது நல மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும், மனுதாரர் கூடுதல் ஆவணங்களுடன் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications