நீட் போராட்டத்துக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
நீட் போராட்டங்களுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி மறுத்துள்ளது.
டெல்லி: தமிழகத்தில் நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டங்களை தடை செய்ய கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதாக மத்திய முதலில் உறுதி தந்தது. இதுதொடர்பாக தமிழக அரசும் அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீட் ஆதரவு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மனமுடைந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video

அனிதாவின் தற்கொலைக்கு நீதி விசாரணை கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார்.
அதில் அவர், அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். சிபிஎஸ்இ தரத்துக்கு தமிழக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நீட் போராட்டங்களுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அப்படி என்ன அவசரமாக விசாரிக்க தேவை இருக்கிறது? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications