கெயில் எரிவாயு குழாய்... விவசாயிகளின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கெயில் குழாய் பதிப்பதற்கு எதிரான விவசாயிகளின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கெயில் எரிவாயு குழாய் தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக செல்ல உள்ளது. 7 மாவட்டங்கள் வழியாக கெயில் நிறுவனம் குழாய் பதிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

இந்த அனுமதியை எதிர்த்து தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி தமிழக விசாயிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மறு சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கெயில் குழாய் பதிக்க அனுமதி தந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முகாந்திரம் இல்லையென்று கூறிவிட்டது. இதனால் விவசாயிகள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications