For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பத்தில் கள்ளத் தொடர்பு இருக்கா.. டைவர்ஸ் கேட்கலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    குடும்பத்தில் கள்ளத்தொடர்பு இருந்தால் டைவர்ஸ் கேட்க முடியும்- வீடியோ

    டெல்லி : கள்ளத்தொடர்பு இருந்தால் கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து கோரலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டத்தின் 497வது பிரிவை நீக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அளித்த தீர்ப்பில் கள்ளத் தொடர்பு என்பது கிரிமினல் குற்றம் அல்ல என்று அதிரடியாக கூறியுள்ளனர்.

     SC says the couple may apply for divorce if anyone indulge in illicit relationship

    வயது வந்த ஆணும் பெண்ணும் கள்ளத்தொடர்பில் இருப்பது குற்றமல்ல. ஒரு வேளை, ஆணுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தால் அல்லது பெண்ணுக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருந்தால் இதை காரணமாக வைத்து விவாகரத்து கோரலாம். திருமணம் செல்லாது என்று அறிவிக்கக் கோரலாம் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 497வது பிரிவு என்பது திருமண உறவுக்கு வெளியே பாலியல் உறவு கொள்வோருக்கு தண்டனை வழங்கும் சட்டமாகும். இதில் ஆண்களுக்கு 5 ஆண்டுகள் தண்டனை உண்டு. ஆனால் பெண்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது. இந்த பிரிவைத்தான் தற்போது அரசியல் சட்டவிரோதமான பிரிவு என்று கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    English summary
    Supremec Court quashes 497 act and says that if anyone indulge in illicit relationship, then they may apply for divorce.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X