தேனிலவு பேச்சு.. ராம்தேவ் மீது எஸ்.சி-எஸ்டி. சட்டத்தின் கீழ் வழக்கு.. கைதாகிறார்!
கோர்கபூர்: தலித் வீடுகளுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்றது தொடர்பாக இழிவாகவும், அநாரீகமாகவும் பேசிய பாபா ராம்தேவ் மீது எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக கைது செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தலித மக்களின் வீடுகளுக்குப் போனது குறித்து கருத்து தெரிவித்திருந்த ராம்தேவ், தேனிலவு பயணம் போல, சுற்றுலா போல தலித் வீடுகளுக்கு போய் வருகிறார் ராகுல் காந்தி என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. தலித் மக்களையும், சமுதாயத்தையும் மிகவும் இழிவுபடுத்தி ராம்தேவ் பேசியிருப்பதாக கண்டனங்கள் வெடித்தன. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் ஆணையமும் ராம்தேவ் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கோரக்பூரில் ராம்தேவ் மீது எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ராம்தேவ் கைது செய்யப்படுவது உறுதியாகி விட்டது.
இதற்கிடையே, இமாச்சல் பிரதேசம் மற்றும் அமேதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யவிருந்த ராம்தேவ் அதை ரத்து செய்து விட்டார்.
இந்த நிலையில் ராம்தேவைக் கைது செய்யக் கோரி பீகார் அமைச்சர் ஷியாம் ரஸ்ஸாக் பாட்னா கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளார். அதேபோல ஆக்ராவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் வக்கீல்கள் சங்கமும், எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் ராம்தேவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.
ஷானவாஸ் ஹூசேன் மீதும் வழக்கு
இதேபோல ராம்தேவ் பேசியதை ஆதரித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் உசேன் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது.
ராம்தேவ் மீதான வழக்கில் இன்று விசாரணைக்கு வருகிறது. ராம்தேவுக்கு எதிராக பாட்னா கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ள உதய்நாத் கூறுகையில், ஒட்டுமொத்த தலித் மக்களையும் இழிவுபடுத்தி விட்டார் ராம்தேவ். நாட்டையே களங்கப்படுத்தி விட்டார். இது நமது கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும். பெண் இனத்தையே அவமானப்படுத்தியுள்ளார். இவர் கைது செய்யப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.












Click it and Unblock the Notifications