SC - ST பெண்களிடம் அழகு இல்லை.. ஆனாலும் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.. ஏன்? காங்., எம்எல்ஏ சர்ச்சை
போபால்: ‛‛எஸ்சி - எஸ்டி பெண்கள் அழகாக இருக்கமாட்டார்கள். ஆனாலும் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். அழகிய பெண்கள் ஆண்களின் கவனத்தை திசைதிருப்புவது தான் பலாத்கார சம்பவங்களுக்கு முக்கிய காரணம்'' என்று மத்திய பிரதேச மாநிலகாங்கிரஸ் எம்எல்ஏ பூல் சிங் பரையா கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் பூல் சிங் பரையா. இவர் பலாத்கார குற்றங்கள் குறித்து ஜாதியை மையப்படுத்தி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக பூல் சிங் பரையா பேசியதாவது:

‛‛இந்தியாவில் பாலியல் வல்லுறவால் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் யார்? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தான். ஒருவன் எந்த மனநிலையில் இருந்தாலும் சரி, அவன் ஒரு அழகான பெண்ணை பார்த்தால், அவனது மனம் திசை திரும்பும். அதோடு அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய தூண்டுவிடும். இதுதான் பலாத்காரத்துக்கான வரையறையாக உள்ளது.
எஸ்சி, எஸ்டி, பிற பிற்படுத்தப்பட்ட பெண்கள் அழகாக இல்லாவிட்டாலும் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள், ஏனெனில் இது சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. பழங்கால நூல்களில் கூறப்பட்ட கருத்துகளால் இந்த பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். நூல் ஒன்றில் குறிப்பிட்ட ஜாதி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது புனித யாத்திரை மேற்கொண்டதற்கு சமமான ஆன்மிக பலனை தரும் என கூறப்பட்டுள்ளது.
இப்போது அவனால் யாத்திரை செல்ல முடியாவிட்டால், என்ன மாற்று? வீட்டில் உடல் உறவு கொண்டால் பலன் கிடைக்கும். இருட்டிலோ, வெளிச்சத்திலோ அவளை பிடித்து வல்லுறவு செய்ய அவன் முயற்சிப்பான். அவளது சம்மதம் இல்லாமல் அவனால் இதை செய்ய முடியாது. அதனால்தான் நான்கு மாதக் குழந்தைகள் மற்றும் ஒரு வயதுக் குழந்தைகள் வல்லுறவு செய்யப்படுகின்றன. அவன் பலனுக்காக இதைச் செய்கிறான்.
மேலும் பாலியல் பலாத்காரம் என்பது தனிநபர்களால் அல்லாமல் குழுவால் இழைக்கப்படும் குற்றமாகும். இதுபோன்ற குற்றங்கள் பிறழ் மனநிலையில் இருப்பவர்களால் நிகழ்த்தப்படுகிறது'' என்று கூறியுள்ளார். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் (பாஜக) கூறுகையி்ல, ‛‛பூல் சிங் பரையா சமூகத்தில் விஷத்தை பரப்புகிறார். சமூகத்தில் வெறுப்பை தூண்டி விடுகிறார். ராகுல் காந்தி அவரை கட்சியில் இருந்து நீக்குவார் என்று நம்புகிறேன்.
இது சமூகத்தின் மற்ற பிரிவினருக்கு சிறித சமூக வெறுப்பைத் தூண்டி வருகிறார். ராகுல் காந்தி வந்து தனது சட்டமன்ற உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்குவார் என்று நம்புகிறேன். இதன்மூலம் சமுதாயத்தில் பிற பிரிவினருக்கு சிறிதளவாவது மரியாதை கொடுப்பதை காட்டும். பூல் சிங் பரையாவின் கருத்தை நான் கண்டிக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் மத்தியப் பிரதேச பாஜக ஊடக பொறுப்பாளர் ஆஷிஷ் அகர்வால், ‛‛இந்தக் கருத்து தற்செயலாக வந்த வார்த்தைகள் அல்ல. இது சித்தாந்த வெளிப்பாடு'' என விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில், ‛‛இந்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. இந்த கருத்துக்கும், கட்சிக்கும் எந்த சம்பவமும் கிடையாது. எந்த வகையான பாலியல் வன்கொடுமையையும் நியாயப்படுத்த முடியாது. பாலியல் வன்கொடுமை செய்பவர் ஒரு குற்றவாளி. அதை ஜாதி அல்லது மதத்துடன் தொடர்புப்படுத்தி பார்க்க முடியாது'' என்று கூறினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications