சு.சுவாமி கைதாகாமல் தப்பினார்... அஸ்ஸாம் கோர்ட் பிடிவாரண்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக அஸ்ஸாம் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தின் காசிரங்கா பல்கலைக் கழகத்தில் மார்ச் 15-ந் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் மக்களிடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி பேசினார் என அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் மார்ச் 19-ந் தேதியன்று சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக கரீம்கஞ்ச் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனிடையே மே 21-ந் தேதியன்று வெறுப்பை தூண்டும் வகையிலான பேச்சு எது? என விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவையும் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்தார்.
SC stays execution of non-bailable warrant against Subramanian Swamy by an Assam court for an alleged hate speech
— ANI (@ANI_news) July 2, 2015 இந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகத சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை கரீம்கஞ்ச் நீதிமன்றம் கடந்த 1-ந் தேதி பிறப்பித்தது. இதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டிருந்தார்.
இம்மனு மீது கடந்த மாதம் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை வேறு நீதிபதி பெஞ்சுக்கு மாற்றுவதாகவும் அதன் மீது ஜூன் 22-ல் விசாரணை நடைபெறும்; அதுவரை கைது நடவடிக்கை இருக்காது எனவும் கூறியிருந்தது.
SC today stayed the arrest warrant issued by Karimganj Court. I will now move court to seek the quashing of the Complaint itself soon.
— Subramanian Swamy (@Swamy39) July 2, 2015 இந்த நிலையில் இன்று சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீதான விசாரணையின் போது, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மேலும் 'வெறுப்பை தூண்டும் வகையிலான பேச்சு' தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
பாடம் கற்காத மத்திய அரசு.. நீட் லீக் விவகாரத்தில் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்.. பின்னணி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications