தமிழகத்திற்குத் தண்ணீர் தராவிட்டால்... கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
டெல்லி: தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இன்று கடும் எச்சரிக்கையுடன் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா அரசோ சட்டசபையைக் கூட்டி காவிரி நீர் குடிநீருக்கு மட்டுமே உள்ளது என கூறி உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை.

மீண்டும் உத்தரவு
இதையடுத்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தபோது, கர்நாடகாவின் நடவடிக்கையை நீதிபதிகள் கண்டித்தனர். அத்துடன் தமிழகத்துக்கு 6,000 கன அடி நீரை திறக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரவை மதிக்காத கர்நாடகா
இதனிடையே தமிழகம், கர்நாடகா மாநிலங்கள் பேச்சுவார்த்தையை நடத்தவும் மத்திய அரசு ஏற்பாடு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் கர்நாடகா செயல்படுத்தவில்லை.

மீண்டும் திறக்கவில்லை
அனைத்துக் கட்சிக் கூட்டம், அமைச்சரவை கூட்டம் என வழக்கம் போல இழுத்தடித்தது. டெல்லி பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் கூட கர்நாடகா, காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடவில்லை.

வெளுத்து வாங்கிய சுப்ரீம்கோர்ட்
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை வந்தது. அப்போது கர்நாடகாவை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர், தமிழகத்துக்கு அக்டோபர் 6-ந் தேதி வரை நீரை திறந்துவிட உத்தரவிட்டனர். இந்த உத்தரவுதான் இறுதியானது... இதனை கர்நாடகா அரசு அமல்படுத்தியாக வேண்டும் என்று கண்டிப்புடன் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடைசி வாய்பு
அத்துடன் நீங்கள் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றத்துக்குத் தெரியும்....இருந்தாலும் உங்களுக்கு கடைசி வாய்ப்பு தருகிறோம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications