தோழி பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்து வெளியிட்ட 2 பள்ளி மாணவிகள்
பரேலி: உத்தர பிரதேசத்தில் இரண்டு பள்ளி மாணவிகள் தங்களின் தோழி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஷெர்கார் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த 18ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அவரது பள்ளித் தோழிகள் இருவர் அமன் என்ற வாலிபருடன் வந்துள்ளனர்.

வீட்டிற்குள் வந்த அவர்கள் மாணவியை ஒரு அறையில் தள்ளி கதவை பூட்டியுள்ளனர். அமன் அந்த மாணவியை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளார். அதை தடுக்காமல் அவரின் தோழிகள் தங்களின் செல்போனில் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவரின் தோழிகள் தாங்கள் எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட அது தீயாக பரவியது. அந்த வீடியோ பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கண்ணில் பட்டபோது தான் விஷயம் வெளியே வந்தது.
உடனே அவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோ எடுத்த இரண்டு மாணவிகளை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அமனை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications