பள்ளியில் சர்ச்சை சாமியார் ஆசாராம் படத்தை வைத்து வழிபட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் !
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு படத்தை வைத்து வழிபட்ட ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபு கடந்த 2013 ஆம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். 16 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட ஆசாராம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தற்போது வயது முதிர்வு மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி புதிய ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் தோலாதர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், ஆசாராம் படத்தை வைத்து வழிபட்டதாகவும், பிற மாணவர்களையும் கடவுள் வாழ்த்துப் பாடலுக்குப் பதில் ஆசாராம் ஸ்தோத்திரத்தை சொல்லும்படி கேட்டுக்கொண்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தொடக்கக் கல்வி செயலாளர், சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஆசாராம் படத்தை வைத்து வழிபட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
சக ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஆசாராமை வழிபடுவதை அவர் நிறுத்தாமல் இருந்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொடக்கக் கல்வி செயலாளர் தெரிவித்தார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications