மஹிந்திரா குழும அதிபர் ஆனந்த் மஹிந்திராவை 'கிளீன் போல்டு' ஆக்கிய பாகுபலி
மும்பை: மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாகுபலி படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் அதை பற்றி புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் படங்கள் தான் ரிலீஸான வேகத்தில் அத்தனை கோடி வசூல் செய்தது, இத்தனை கோடி வசூல் செய்தது, வாவ் என்ன நடிப்பு, என்ன தொழில்நுட்பம் என்று விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டி வந்தார்கள். தற்போது அந்த சாதனையை எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் படைத்துள்ளது.
பாகுபலி படத்தை பார்த்தவர்களால் அதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

வசூல் சாதனை
பாகுபலி படம் ரிலீஸான 5 நாட்களில் 265 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பாகுபலி
உலக பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றிலேயே புதிய சாதனை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
|
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாகுபலி படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, பாகுபலி ஒரு பெரிய சாதனை. இந்திய புராணங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை பெரிய திரையில் அருமையாக காட்டியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
|
பாகுபலி
பாகுபலி ஒன்றும் ஹாலிவுட் பாணியில் இல்லை. மாறாக இந்திய டிஎன்ஏவை தக்க வைத்துள்ளது. கவர்ந்திழுக்கும் சவுண்ட் டிராக், வித்தியாசமான காதல் காட்சிகள் படத்தின் தனித்துவம் என்று ட்வீட் செய்துள்ளார் ஆனந்த்.
|
இரண்டாம் பாகம்
படத்தை இரண்டாவது முறை பார்க்கப் போகிறேன். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்க ஆவலாக உள்ளது. ரொம்ப நாட்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று ராஜமவுலிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications