விசாகப்பட்டினத்தில் ஒருநாள் கிரிக்கெட்: சீமாந்திரா வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
காககிநாடா: விசாகப்பட்டினத்தில் இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என்று சீமாந்திரா வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.
வரும் 24-ந் தேதி விசாகப்பட்டினத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சீமாந்திரா வழக்கறிஞர்களும் ஒருநாள் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் முப்பால சுப்பாராவ் கூறுகையில், சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் காகிநாடாவில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், இந்திய-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் ஒருநாள் போட்டியை நடத்துவது என்பது ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக போராடுவோரை காயப்படுத்தும் செயல். இதனால் இந்தப் போட்டியை நடத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இம்மாதம் 23-ந் தேதி வரை போராட்டத்தைத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. 24-ந் தேதி கடப்பாவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது என்றார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications