ஓய்ந்த போராட்டம்.. சீமாந்திராவில் இயல்பு நிலை திரும்புகிறது
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிராக 2 மாத காலமாக நடைபெற்ற போராட்டங்கள் ஓய்ந்த நிலையில் சீமாந்திராவில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கானா தனி மாநிலம் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் தொடர் போராட்டம் நடந்து வந்தது.
கடற்கரையோர மாவட்டங்களில் தொடர் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூலை 31-ந் தேதி முதல் ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும் தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஒரு மாத காலத்துக்குப் பின்னர் பதற்றம் சற்று தணிந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் சித்தூர் உள்ளிட்ட ஆந்திர எல்லை மாவட்டங்களுக்கு மட்டும் ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அரசு நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அனைத்து போராட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன.
இதையடுத்து சீமாந்திரா பகுதிகளில் தற்போது இயல்பு நிலை திரும்புகிறது. மேலும் விஜயநகரம் பகுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 14 மணி நேரத்திற்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications