3வது நாளாக பற்றி எரிகிறது சீமாந்திரா..மின்சாரம் முற்றிலும் துண்டிப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் 3வது நாளாக வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. சீமாந்திரா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 70 நாட்களாக அமைதி வழி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மத்திய அமைச்சரவை தெலுங்கானாவுக்கு ஒப்புதல் தெரிவித்த நிலையில் கடந்த 3 நாட்களாக பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளன.
இந்த போராட்டத்தில் 30 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். இதனால் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் ஐடி நிறுவனங்களுக்கு சிக்கல்
இதனால் ஹைதராபாத்தில் இயங்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ரயில் போக்குவரத்து பாதிப்பு
மேலும் ரயில் போக்குவரத்தும் கடுமையான பாதிப்புக்குள்ளானது. நாட்டின் 2வது மிகப் பெரிய ரயில் நிலையமான விஜயவாடாவில் ஏராளமான ரயில்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

விஜயநகரத்தில் தொடர் ஊரடங்கு
சீமாந்திராவிலேயே விஜயநகரத்தில்தான் அதிகளவில் வன்முறை வெடித்திருப்பதால் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வாகனங்கள் எரிப்பு
இதேபோல் சீமாந்திராவின் பல நகரங்களில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடியே கிடக்கின்றன. தொடர்ந்தும் அங்கு பதற்றமான நிலைமையே நீடித்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications