பிஞ்சுகளுக்கு பாலியல் தொல்லை... சிக்கிய சாமியார் சிவசங்கர் பாபாவை டேராடூனுக்கே போய் அள்ளும் போலீஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளியில் படிக்கும் பிஞ்சு பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சிக்கிய சர்ச்சை சாமியார் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பிரபலமான பள்ளிகள் அடுத்தடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியின் 2 ஆசிரியர்கள் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.

பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம்

பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம்

ஆனாலும் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காப்பாற்றும் வகையில் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டது என்பதும் குற்றச்சாட்டு. இதனால் அந்த பள்ளியின் ஒட்டுமொத்த நிர்வாகமும் விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கின்றனர்.

டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா

டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா

இந்த பஞ்சாயத்து அடங்குவதற்குள் ஒருகாலத்தில் டான்ஸ் சாமியார் என பெயரெடுத்த சர்ச்சை சாமியார் சிவசங்கர் பாபா நடத்தி வரும் பள்ளியிலும் பாலியல் புகார் வெடித்தது. சென்னை அருகே கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபாவால் நடத்தப்பட்டு வரும் சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளியில்தான் இந்த புகார் வெடித்தது.

பாய்ந்த போக்சோ சட்டம்

பாய்ந்த போக்சோ சட்டம்

இதனால் சிவசங்கர் பாபாவை கைது செய்ய வேண்டும் என்று குரல்கள் வலுத்தன. இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

டேராடூனில் பதுங்கல்

டேராடூனில் பதுங்கல்

இதனிடையே சிவசங்கர் பாபா, ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் குழந்தைகள் உரிமை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்த வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா பதுங்கி உள்ளார்.

டேராடூன் செல்கிறது சென்னை போலீஸ்

டேராடூன் செல்கிறது சென்னை போலீஸ்

இதனால் டேராடூனுக்கே சென்று சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்யக் கூடும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆசிரமங்கள் நடத்தி பலத்கார குற்றங்களில் சிக்கிய பிரேமானந்தா சாமியாரும் இப்படித்தான் செல்வாக்குடன் வலம் வந்தார். ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது என்பதும் அண்மைக்காலத்தில் தமிழகத்தில் நடந்த ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+