காங்கிரஸில் தொடரும் கலகக் குரல்... சோனியாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ஜனார்த்தன் திவேதி!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து கலகக் குரல்கள் வெடித்து வருகின்றன.. தற்போது காங்கிரஸ் மேலிடத்தின் நடவடிக்கைகளை கட்சியின் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி கடுமையாக சாடியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சோனியா மற்றும் ராகுல் தலைமைக்கு எதிராக அவ்வப்போது கலகக் குரல்கள் வெடித்து வருகின்றன.

சோனியா, ராகுல் ஓய்வு பெறனும்..
கடந்த சில நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஜக்மீத்சிங் பிரார், சோனியாவும் ராகுல் காந்தியும் 2 ஆண்டுகாலத்துக்கு கட்சியை விட்டு வெளியேறி ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஜனார்த்தன் திவேதி போர்க்கொடி
தற்போது மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜனார்த்தன் திவேதியும் காங்கிரஸ் மேலிடத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ஜக்மீத்சிங் விமர்சனம் பற்றி கருத்து தெரிவித்த ஜனார்த்தன் திவேதி, நான் தனிப்பட்ட நபர்களைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் எந்த ஒரு அமைப்பிலும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கின்ற பொறுமை மிகவும் அவசியம். நாம் சொல்வதை மற்றவர்கள் கேட்டாக வேண்டிய நிலையை உருவாகக் கூடாது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மறுப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுலை பகிரங்கமாக ஜனார்த்தன் திவேதி விமர்சித்துள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, திவேதியின் கருத்து என்ன என்பது எனக்கு தெரியவில்லை. அது பற்றி தெரிந்த பின்னர் கருத்து தெரிவிக்கிறேன் என்றார்.

பொருளாதார இடஒதுக்கீடு
ஜனார்த்தன் திவேதி இப்படி சர்ச்சைகளை கிளப்புவது ஒன்றும் புதியதும் அல்ல. லோக்சபா தேர்தலின் போது சமூக நீதிக்கான இடஒதுக்கீடு அடிப்படையை முடிவுக்குக் கொண்டு வந்து பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா வருகையால் கோபம்?
இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக பிரியங்கா காந்தி களம் இறக்கப்படலாம் என்றும் அவருக்கு ஜனார்த்தன் திவேதி வசம் இருக்கும் தேசிய பொதுச்செயலர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த அதிருப்தியின் வெளிப்பாடாக காங்கிரஸ் மேலிடத்தை அவர் விமர்சித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications