பாஜகவில் மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் இன்று இணைந்தார்.
இந்தியா டுடே குழுமம் உள்ளிட்டவற்றின் ஆசிரியராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் டெல்லியில் ராஜ்நாத்சிங் முன்னிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

தற்போது பாஜகவில் இணைந்திருக்கும் எம்.ஜே. அக்பருக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே சில பத்திரிகையாளர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கும் நிலையில் எம்.ஜே. அக்பர் தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார்.
மேலும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. என்.கே.சிங்கும் இன்று பாஜகவில் ஐக்கியமானார். தாம் பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த சிங், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வளர்ச்சி பற்றி அக்கறைகாட்டவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications