திகார் சிறையில் நாளை ஓம் பிரகாஷ் சவுதாலா சரணடைய டெல்லி ஹைகோர்ட் உத்தரவு!!
டெல்லி: ஆசிரியர் தேர்வு முறைகேடு ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து இடைக்கால ஜாமீன் பெற்றிருந்த இந்திய தேசிய லோக்தளம் கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலாவை நாளை திகார் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சிக்கியவர். 2000-ம் ஆண்டு 3 ஆயிரம் இளநிலை ஆசிரியர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 8 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் சவுதாலா உள்ளிட்டோர் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் அவரது சகோதரர் மறைவைக் காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் பெற்றார் சவுதாலா.

அதன் பின்னர் வருகிற 15-ந் தேதி நடைபெறும் ஹரியானா மாநில தேர்தலுக்காக அவர் தற்போது பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சவுதாலா நிபந்தனை ஜாமீனை மீறியுள்ளதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது.
இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், சவுதாலாவை நாளையே திகார் சிறை அதிகாரிகளிடம் சரணடைய உத்தரவிட்டது. அத்துடன் தேவைப்பட்டால் சவுதாலாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் அனுமதி அளித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்,.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications