பாபர் மசூதி பிரச்சனையை நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சுப்ரீம்கோர்ட் அட்வைஸ்
பாபர் மசூதி பிரச்சனைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
டெல்லி: பாபர் மசூதி- ராமர் கோவில் பிரச்சனைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் கூறியதாவது:

இந்த பிரச்சனை மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்தகைய விவகாரங்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும். நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண உச்சநீதிமன்றமும் உதவ தயாராக இருக்கிறது.
இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 31-ந் தேதி நடைபெற உள்ளது. அப்போது அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாமா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தலைமை நீதிபதி கேஹர் பெஞ்ச் தெரிவித்தது.
இன்றைய விசாரணையின் போது மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குறுக்கிட்டு, இந்த பிரச்சனையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில்தான் முடிவடைந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.
ஆனால் உச்சநீதிமன்றமோ, அனைத்து தரப்பும் உட்கார்ந்து பேசி தீர்வு காண வேண்டும். உச்சநீதிமன்றமே இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் மத்தியஸ்தரையும் தெரிவிக்கும் எனக் குறிப்பிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications