மாமனார் வீட்டில் புகுந்து 6 மாத குழந்தை, மனைவி உட்பட 7 பேர் மீது ஆசிட் ஊற்றிய மருமகன்
மீரட்: உத்திரப்பிரதேசத்தில் மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது ஆசிட் வீசிய நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் வசித்து வருபவர் நிசார். விவசாயியான இவரது மருமகன் சாஜித். வரதட்சணைப் பிரச்சினை காரணமாக சாஜித்தும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு 2 மணியளவில் நிசாரின் இல்லத்திற்குள் அதிரடியாக தனது நண்பருடன் நுழைந்துள்ளார் சாஜித். அப்போது அங்கே உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது அவர்கள் ஆசிட்டை வீசித் தாக்கியுள்ளனர்.
இதில், 6 மாத குழந்தை, சாஜித்தின் மனைவி உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு வரதட்சணைப் பிரச்சினை தான் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சாஜித்தையும், அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.
வரதட்சணைப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications