இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தின் 'குஜராத் பந்த்'- வெடித்தது வன்முறை... 8 பேர் பலி!!
குஜராத் : குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் முழு அடைப்புப் போராட்டம் நடத்திய போது நிகழ்ந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் பெருமளவு வசிக்கும் படேல் சமூகத்தினர். தங்கள் சமூகத்தை ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரியும், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரியும் , ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அகமதாபாத்தில் பல லட்சம் பேரை ஒன்று திரட்டி தங்களது கோரிக்கையை நிறைவேற்றவும் ஹர்திக் படேல் வலியுறுத்தி இருந்தார். அப்போது ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் ஆத்திரம் அடைந்த படேல் சமூகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களைத் தீக்கிரையாக்கினர்.
இதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று குஜராத் முழுஅடைப்புக்கு அழைப்பு படேல் சமூகம் அழைப்பு விடுத்தது. இதனால் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், சூரத் , ராஜ்கோட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது.
சில இடங்களில் வாகனங்களுக்கு தீவைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. சூரத் நகரில் நிகழ்ந்த வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டதால் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மாநிலத்தின் பல பகுதிகளில் இணைய சேவையும் செல்போன் சேவையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. போராட்டம் தீவிரமடைந்ததால் 5000 துணை ராணுவ வீரர்கள் குஜராத்தில் குவிக்கப்பட்டனர்.
முன்னதாக முதல்வர் ஆனந்திபென் படேலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதியளித்திருந்தார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications