இபிஎஸ் அரசுக்காக திருப்பதி ஏழுமலையானை தரிசித்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: எடப்பாடி பழனிசாமி அரசு தொடர்ந்து செயல்பட வேண்டி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து செய்லபட வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தேன். கோவில்களில் ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் கோவில்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது மக்களை அச்சம் அடைய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications