கருவின் பாலினத்தைக் கண்டறிய தடையை மீறி விளம்பரமா? கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட்டுக்கு நோட்டீஸ்
டெல்லி : தாயின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறியும் சோதனைக்கு தடையை மீறி விளம்பரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கூகுள் இந்தியா, யாகூ இந்தியா, மைக்ரோசாப்ட் கார்ப்போரேஷன் இந்தியா ஆகிய இணையதளங்களுக்கு எதிராக சாபு மாத்யூ ஜார்ஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கருவில் இருக்கும் குழந்தை, ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோதனை குறித்த விளம்பரங்கள் மற்றும் தகவல்களை உலகம் முழுவதும் முடக்குமாறு அந்த இணையதளங்களுக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், அதை அவை கடைபிடிக்காமல், இந்திய சட்டங்களை மீறி வருவதாக அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் ஆஜராகி வாதாடினார். அதையடுத்து, இந்த குற்றச்சாட்டுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் ஆகிய இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications