எல்லை தாண்டி 2.5 கிலோமீட்டர் உள்ளே சென்று பாக்.குக்குள் "தீபாவளி" கொண்டாடிய இந்தியா!
ஸ்ரீநகர்: இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி 2 கிலோமீட்டர் மற்றும் 500 மீட்டர் வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்துள்ளன.
கடந்த 18ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 18 வீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தானின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் முடிவு செய்தது.

4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டாலும் அவர்கள் 18 இந்திய வீரர்களை கொன்றதை நினைத்து பாகிஸ்தான் கர்வத்தில் இருந்தது. இந்நிலையில் தான் இந்தியாவை தாக்க எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டோரம் பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாத முகாம்கள் இருப்பதை உளவுத் துறை கண்டுபிடித்துக் கூறியது.
இதையடுத்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் புதன்கிழமை இரவு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நேரம் குறித்தன. இரவு 12. 30 மணிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்த இந்திய விமானப்படை அதிகாலை 4.30 மணி வரை தீவிரவாத முகாம்கள் மீது சரமாரியாக குண்டு மழை வீசித் தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து 4 மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 5 பாகிஸ்தான் தீவிரவாத ஊடுறுவல் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற அதிரடி தாக்குதல் இனியும் தொடரும் என்று ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி 2 கிலோமீட்டர் மற்றும் 500 மீட்டர் வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று தீவிரவாத முகாம்களை தாக்கியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications