'தம்பி' ஷாருக்கானுக்கு ராக்கி கட்டிவிட்ட மமதா 'அக்கா'
கொல்கத்தா: ரக்ஷா பந்தனை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார்.
பெண்கள் தங்களின் சகோதரர்கள் மற்றும் தாங்கள் சகோதரர்களாக நினைக்கும் ஆண்களுக்கு ராக்கி கட்டும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நடிகர் ஷாருக்கானின் கையில் ராக்கி கட்டிவிட்டுள்ளார்.

மமதா கட்டிய ராக்கியை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஷாருக்கான். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். மமதா திதி எனக்கு ராக்கி கட்டிவிட்டார்கள். கொல்கத்தாவுக்கும், காவல் துறைக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கானை மமதா தனது சகோதரர் போன்று பார்க்கிறார். கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றபோது மமதா அணிக்கு பாராட்டு விழா நடத்தி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications