கலாம் வசித்த டெல்லி பங்களாவில் குடியேறும் அமைச்சர் மகேஷ் சர்மா
டெல்லி: டெல்லி ராஜாஜி மார்க்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வசித்த பங்களாவில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா குடியேறுகிறார்.
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு அப்தல் கலாம் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பங்களாவில் தான் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து தங்கி வந்தார். கலாம் மறைவுக்கு பிறகு அந்த பங்ளாவை காலி செய்யுமாறு மத்திய அரசு அவரின் உதவியாளரிடம் தெரிவித்திருந்தது.
கலாம் வசித்த பங்களாவை அவரது நினைவு மண்டபமாக மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கலாம் வசித்த பங்களாவில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா குடியேற உள்ளார்.

இது குறித்து மகேஷ் சர்மா கூறுகையில்,
ராஜாஜி மார்க் பங்களா எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பங்களாவை நினைவு மண்டபமாக மாற்றுவது இல்லை என்பது அரசின் கொள்கை. 11 மாதங்கள் கழித்து எனக்கு அரசு பங்களா கிடைத்துள்ளது. முன்னதாக தியாக்ராஜ் மார்க் பங்களா எனக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்தவர்கள் காலி செய்யாததால் என்னால் அங்கு குடியேற முடியவில்லை என்றார்.
ராஜாஜி மார்க் பங்களாவில் உள்ள கலாம் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வரும் 31ம் தேதிக்குள் காலி செய்யப்பட வேண்டும். அவை ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
கலாம் முஸ்லீமாக இருந்தபோதிலும் சிறந்த தேசியவாதியாக இருந்தார் என்று விமர்சித்த மகேஷ் சர்மா அவர் வசித்த பங்களாவில் குடியேற உள்ளார்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications